யாழில் விமான சேவைகளை நடத்த இந்தியா எப்போதும் தயார்! அமைச்சருக்கு ஸ்ரீதரன் பதிலடி

0
131

யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியாவும் இந்தியன் விமான நிறுவனங்களும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இலங்கை அரசே சலுகைகளை வழங்காமல் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த விரும்பும் இந்திய விமானங்களுக்கு அரசு சலுகைகளை வழங்குகின்றது. ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை’ என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் நேற்று (22) தெரிவித்தார்.

இதற்குச் சிறீதரன் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், இதற்குப் பதிலளித்த அமைச்சர், “நாங்கள் விமானம் வரும் என்று பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் விமானம் வரவில்லை.

இந்திய விமான சேவையுடன் கலந்துரையாடல்  

யாழில் விமான சேவைகளை நடத்த இந்தியா எப்போதும் தயார்! அமைச்சருக்கு சிறீதரன் பதிலடி | Jaffna Airlines Start Issue Help India

பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள்.

முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால், எந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை” என்றார்.