கொழும்பில் பாடசாலைக்கு மது போதையில் வந்த பிரபல பாடசாலை பிரதி அதிபர்!

0
193

கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய நிலையில் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார்.

எனினும் அவரால் உந்துருளியை இயக்க முடியாமையினாலும் தனது உடல் கட்டுப்பாட்டினை இழந்தமையினாலும் கீழே விழுந்துள்ளார்.

பெற்றோர்கள் விசனம்

இந்நிலையில் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் கீழே விழுந்த ஆசிரியரை தூக்குவதற்கு முயற்சித்தபோதே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

பிரபல பாடசாலையில் பிரதி அதிபரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! | Vice Principal In The Famous School

அதேசமயம் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டமும் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்களும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து உதவி அதிபர் மதுபோதையுடன் பாடசாலைக்கு வந்த செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.