பாராளுமன்றத்தில் பரிமாறப்பட்ட உணவில் சாக்கு நூல்!

0
124

நாடாளுமன்றத்தில் இன்று (23) ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சுமார் ஒரு அடி நீளமான சாக்கு நூல் காணப்பட்டது.

உணவு உண்ணும் போது ஊடகவியலாளர் ஒருவர் இந்த சாக்கு நூலை கண்டெடுத்ததையடுத்து இதுதொடர்பில் உணவு திணைக்களத்தின் தலைவரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

உணவில் புழுக்கள், பிளாஸ்டிக் துண்டுகள்

உணவில் சாக்கு நூல் இருந்ததைக் கண்டதும் சில ஊடகவியலாளர்கள் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்தினர்.

அதேசமயம் நாடாளுமன்ற உணவில் இதற்கு முன்பும் புழுக்கள், பிளாஸ்டிக் துண்டுகள், சரம் துண்டுகளும் அவ்வப்போது கிடைத்ததும்  நினைவில் கொள்ளத்தக்கது.

இதேவேளை, நேற்று (22) நாடாளுமன்றத்தின் உணவுப் பிரிவினால் வழங்கப்பட்ட மீனில் விஷம் கலந்திருந்ததால் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.