உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலக நாடுகள் பிளவு – அதிபர் மக்ரோன்

0
201

ரஷ்யா, உக்ரேன் மீது மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளைப் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) சாடியுள்ளார்.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது குறித்து நடுநிலையில் இருந்து மௌனம் காக்கும் நாடுகள் அத்தகைய செயல்களுக்கு ஒரு விதத்தில் ஆதரவு தெரிவிப்பதாகத் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுக் கூட்டம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் (Emmanuel Macron) உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது உலக நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.

வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளைக் கைப்பற்றும் பழைய வழக்கத்தை மீண்டும் முன்னிலையில் வைப்பதற்கு ரஷ்யாவின் அத்தகைய போக்கு வழிவகுப்பதாகவும் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) குறிப்பிட்டார்.

உக்ரேனால் உலகநாடுகள் பிளவுபட்டுள்ளது! | The World Is Divided By Ukraine

அத்துடன் “அமைதியை நோக்கிய பாதையைப் பின்பற்றும் நாடுகளுக்கு ஆதரவளியுக்குமாறு கோரிய அவர் (Emmanuel Macron) ரஷ்யா அதன் போர் நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தார்.