மாதாந்த செலவுகளுக்கு திக்குமுக்காடும் அரசாங்கம்

0
320

நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

செலுத்த வேண்டிய தொகை நிலுவை

மாநில வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

மாதாந்த செலவுகளுக்கே  திண்டாடும் அரசாங்கம் | Government Is Struggling With Monthly Expenses

அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணம் கட்டமைக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.