30 வருடங்களாக பேசாத சகோதரர்கள்; கனடாவில் மேயர் பதவிக்கு போட்டி

0
421

சுமார் 30 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்த இரண்டு சகோதரர்கள் தற்போது ஒன்ராறியோ நகரத்தில் மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

அக்டோபர் 24ல் முன்னெடுக்கப்படும் தேர்தலுக்கான பதிவு முடிவடைவதற்கு முந்தைய நாள் வரை தற்போதைய மேயர் பில் ஸ்டீல் போர்ட் கோல்போர்னில் போட்டியின்றி காணப்பட்டார்.

ஆனால் அதிரடி திருப்பமாக அவரது சகோதரர் சார்லஸ் ஸ்டீல் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இந்த நிலையில் ஒரே தொகுதியில் இரு ஸ்டீல்கள் எதிரும் புதிருமாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

30 ஆண்டுகளாக பேசிக்கொள்ளாத சகோதரர்கள்: கனடாவில் மேயர் பதவிக்கு போட்டி | Ontario Town Mayor Brothers Both Running

சார்லஸ் தனது சகோதரனுடன் சுமார் 30 ஆண்டுகளாக பேசவில்லை என்றும் பதிவு செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு முடிவைப் பற்றி யோசித்த போதிலும் அவருக்கு எதிராக போட்டியிடும் நோக்கத்தை முன்பே விவாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமது இந்த முடிவு கண்டிப்பாக அவருக்கு மகிழ்ச்சியை தராது என்பது தமக்கு தெரியும் எனவும் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே, 17 வருடங்கள் நகர சபை உறுப்பினராக இருந்து 2018 ல் முதன்முதலில் மேயராக தெரிவு செய்யப்பட்ட பில் ஸ்டீல் சான்றளிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் தனது சகோதரரின் பெயரைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும் தனது இருக்கைக்காக எப்போதும் போராடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.