உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானிக்கு 2வது இடம்!

0
497

உலக பணக்காரர்களின் பட்டியலில் LVMH குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் (Bernard Arnault) பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முன்னனி பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி 2 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதாவது, அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (Gautam Adhani) (60வயது) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர் ஆவார்.

இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.

உலக பணக்காரர்களின் பட்டியலில் கௌதம் அதானிக்கு கிடைத்த இடம்! | Gautam Adhani Is Second World S Richest People

மேலும், அதனை கணக்கில் கொண்டு போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்.வி.எம்.எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி (Gautam Adhani) 155.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2 வது இடம் பிடித்துள்ளார்.

அதேவேளை கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4 வது பெரிய பணக்காரராக இருந்தார்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் கௌதம் அதானிக்கு கிடைத்த இடம்! | Gautam Adhani Is Second World S Richest People

அதன் பின் குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் LVMH நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.38 லட்சம் கோடி) 3 வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4 வது இடத்திலும் உள்ளனர்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் கௌதம் அதானிக்கு கிடைத்த இடம்! | Gautam Adhani Is Second World S Richest People

அதேவேளை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டொலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5 வது இடத்திலும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8 ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.