முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்ப கேட்ட காதலன்!

0
226

மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக் கேட்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

9 ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் காதலில் இருந்து வந்த அவர் அண்மையில் காதல் முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கு அந்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தான் கொடுத்த காரை அவரது புதிய காதலன் ஓட்டி வருவது பிடிக்காததால் அதை கேட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார்.

அவர் பதிவிட்ட பதிவு

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் “நானும் அவளும், 9 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் தற்போது என்னை விட்டு அவர் பிரிந்து சென்று விட்டார். நாங்கள் பிரிந்ததை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் பிரிந்ததற்காக காரணம் இதுவரை எதையுமே நான் அவரிடம் கேட்டதில்லை.

மேலும், நான் அவளுக்கு பரிசாக கொடுத்த காரை அவளது புதிய காதலன் பயன்படுத்தி வருவது சமீபத்தில் தான் எனக்கு தெரிய வந்தது. நாங்கள் பிரிவதற்கு முன்பிருந்தே அந்த பையனுடன் அவர் பழகி வந்திருக்கிறார். டேட்டிங்கில் இருந்த போதெல்லாம் அவருக்கு கார் உட்பட ஏகப்பட்ட பரிசுகளை கொடுத்திருக்கிறேன். என்னை அவர் அவமானப்படுத்தி விட்டார்.

அத்தோடு ஏமாற்றியதை கூட நான் பெரிதுபடுத்தி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த காரை அவரின் புதிய காதலன் ஓட்டிச் செல்வது எனக்கு பிடிக்கவில்லை. இப்போது எனக்கு என்ன தெரிய வேண்டும் என்றால் நான் வாங்கிக் கொடுத்த காரை உள்ளிட்ட பொருட்களை திரும்பி கேட்பதில் எதும் தவறா?” என ஆதங்கத்துடன் கேட்டுள்ளார்.  

நெட்டிசன்கள் கூறியது இதோ:

“அவர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு காரை எரிக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்க வேண்டும்.”

“கார் உங்கள் பெயரில் இருந்தால், நீங்கள் அதை திரும்பப் பெறலாம், நீங்கள் அவளுக்கு வழங்கிய மற்ற பரிசுகளைப் போலவே, அதை நீங்கள் மறந்துவிடலாம் என்று நினைக்கிறேன்.”