கான்பிலிக்ட் தீவை வாங்கும் சீனா.. பயத்தில் ஆஸ்திரேலியா!

0
377

தீவு ஒன்றை சீனா விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 கான்பிலிக்ட் தீவு

ஆஸ்திரேலியா நாட்டை சுற்றிலும் பல தீவு நாடுகள் உள்ளது. இதனை ஆஸ்திரேலியர்கள் சிலர் விலைக்கு வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில், கான்பிலிக்ட் எனப்படும் தீவு கூட்டங்களை சீனாவுக்கு விற்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

புதிய தீவை வாங்கும் சீனா..பயத்தில் ஆஸ்திரேலியா - அதிகரிக்கும் ஆபத்து! ஏன்? | Australia Condemns China For Buying A New Island

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது கான்பிலிக்ட் தீவுகளை வாங்காமலேயே சீனாவை நிறைய விசயங்களில் ஆஸ்திரேலியா எதிர் கொண்டு வருகிறது.

 தீவை வாங்கும் சீனா

அந்த தீவுகளை சீனா வாங்காமல் இருப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என அவர் கூறியதுடன் அவற்றை நாங்கள் வாங்க போவதுமில்லை என தெளிவுப்படுத்தி உள்ளார். 500 தீவுகளில், கான்பிலிக்ட் தீவுகளும் ஒன்று. நாட்டின் வரி செலுத்தும் மக்களோ வர்த்தக நிறுவனங்களோ அவை எல்லாவற்றையும் வாங்குவதற்கான சூழலில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா கண்டனம்

எனினும் கடந்த ஜூன் மாதத்தில் தீவின் உரிமையாளரான இயான் காவ்ரீ-ஸ்மித், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வாங்குக்கு அனுப்பிய இ-மெயிலில் தீவுகளை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்க முன்வந்துள்ளார். ஆனால் அவர் கூறிய விலையை கொடுக்க ஆஸ்திரேலியா அரசு தர தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தங்களுடைய தீவு வழியாகத்தான் ஆஸ்திரேலியாவின் ரகசிய கேபிள்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த தீவை ஆஸ்திரேலியா வாங்கவில்லை என்றால் சீனாவுக்கு விற்றுவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனா இந்த தீவை வாங்குவதற்காக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய அரசு தெரிவித்த போது அந்த தீவை வாங்க ஆஸ்திரேலியா விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சீனா வாங்காமல் இருப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஆஸ்திரேலியா ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.