கொழும்பில் விண்ணைத் தொடும் காணி விலை வாசி!

0
195

கொழும்பில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022 -யின் முதலாமரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு 17.0 சதவீத மாற்றத்தினால் 186.9 ஆக அதிகரித்தது.

காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியின் ஆண்டு அதிகரிப்பும் (17.0) அரையாண்டு அதிகரிப்பும் (4.6 சதவீதம்) 2021இன் அரையாண்டுப் பகுதியில் அவதானிக்கப்பட்ட அதிகரித்த போக்கின் வீழ்ச்சியைக் காண்பித்தன.

கொழும்பில் விண்ணை முட்டும்  விலைகள்.! | Colombo Land Prices Have Reached The Peak

காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது வதிவிடக் காணி விலை மதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.

கைத்தொழில் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டி 20.6 சதவீதம் கொண்ட அதிகூடிய ஆண்டு அதிகரிப்பினைப் பதிவு செய்து அதனைத் தொடர்ந்து வர்த்தகக் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியும் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் காணப்பட்டன.

கொழும்பில் விண்ணை முட்டும்  விலைகள்.! | Colombo Land Prices Have Reached The Peak