வவுனியாவில் விபச்சார விடுதி அதிரடி முற்றுகை!

0
322

வவுனியாவில் விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து இரு பெண்கள் உப்பட நான்கு பேரை கைது செய்துள்ளார்.

மேலும் இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (19-08-2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இக்கைது சம்பவத்தின் போது குறித்த விடுதியிலிருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விபச்சார விடுதி அதிரடி முற்றுகை... இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! | Four Arrested Two Women In A Brothel In Vavuniya

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

வவுனியாவில் விபச்சார விடுதி அதிரடி முற்றுகை... இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! | Four Arrested Two Women In A Brothel In Vavuniya

இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

வவுனியாவில் விபச்சார விடுதி அதிரடி முற்றுகை... இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! | Four Arrested Two Women In A Brothel In Vavuniya

அத்துடன் குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்ததால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

வவுனியாவில் விபச்சார விடுதி அதிரடி முற்றுகை... இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! | Four Arrested Two Women In A Brothel In Vavuniya

மேலும் குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதி ஒய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.