நாட்டைப் பற்றி கவலைப்படாமல் பதவிகளுக்காக போராடும் அரசியல்வாதிகள்

0
340

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறினார்.  

இதேவேளை பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பதோடு சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை நடத்துங்கள் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அடித்துக்கொள்ளும் அரசியவாதிகள்

மேலும் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்ட போது அந்நாட்டு அரசியல்வாதிகள் அரசியல் கட்சி பேதங்களை துறந்து பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை தாய்லாந்து,தென்கொரியா ஆகிய நாடுகள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்ட போது அந்நாட்டு மக்கள் தமது சொத்துக்களையும், தங்கத்தையும் அரசாங்கத்திற்கு வழங்கி பொருளாதார நெருக்கடியினை வெற்றிக்கொண்டார்கள்.

அந்த நாட்டு அரசாங்கங்கள் அந்நாட்டு மக்களை ஒருபோதும் நெருக்கடிக்குள்ளாக்கவில்லை என குறிப்பிட்ட அவர் யார் ஜனாதிபதி,யார் பிரதமர்,யாருக்கு எந்த அமைச்சு என்பதற்கு மாத்திரம் அவதானம் செலுத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.