விதைத்த வினையை தற்போது அறுவடை செய்யும் கோட்டாபய! – மணிவண்ணன்

0
591

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களின் எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்து சென்றமை தொடர்பாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், வினை விதைத்தவன் வினையறுப்பான் திணை விதை்தவன் திணையறுப்பான் என்றொரு பழமொழி உண்டு.

அதேபோலதான் 2009க்கு முற்பட்ட காலப்பகுதியில் குறிப்பாக இறுதி யுத்தம் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போது தமிழ் மக்கள் பேரவலத்தை சந்தித்ததுடன் இருப்பிடமில்லாது ஒவ்வவொரு இடமாக இடம்பெயர்ந்து சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலுக்கு சென்று பல்வேறு அவலங்களை சந்தித்தார்கள் இன அழிப்பை சந்தித்தார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்.

விதைத்த வினையை தற்போது அறுவடை செய்யும் கோட்டாபய! | Gotapaya Reaps What He Sows Now

அதற்கு அந்த காலப்பகுதியிலே அதற்கெல்லாம் பெறுப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் தான் கோட்டபாய ராஜபக்ச.

அந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களுக்கு பொறுப்பானவர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் யுத்த குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்று சர்வதேச சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டவர் இன்று தனது சொந்த மக்களாலேயே அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.

மேலும் அவர் விதைத்த வினையை அறுவடை செய்து கொண்டிருக்கின்றார் என்று தான் நான் நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.