யாழில் வித்தியாசமாக பிறந்த கோழி குஞ்சு!

0
231

யாழ்ப்பாணம்- அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நான்கு கால்களுடன் கோழி குஞ்சு ஒன்று பொரித்துள்ளது.

மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவர் கோழி வளர்ப்பினையே ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார்.

இவரது வீட்டில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்துள்ள நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் அதிசயமாக காணப்படுகின்றது.

ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல குறித்த கோழிக் குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றது.

குறித்த கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.