இலங்கைத் தமிழரான மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்த சீரியல் இன்று வெளியீடு

0
222

ஒன்ராறியோவில் வாழும் மைத்ரேயி நடித்துள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் இன்று வெளியாகிறது. மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், மைத்ரேயி நடித்துள்ள Never Have I Ever என்ற நெட்ப்ளிக்ஸ் தொடரின் மூன்றாவது சீஸன் இன்று துவங்குகிறது.

ஒன்ராறியோவின் Mississaugaவில் வாழும் மைத்ரேயி (19) ஒரு கனேடிய நடிகை என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். இன்னொரு முக்கிய விடயம், மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

மைத்ரேயி நடித்துள்ள Never Have I Ever என்ற நெட்ப்ளிக்ஸ் தொடர் தற்போது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர்.

தொடரைப் பார்ப்பவர்கள், அடுத்து இந்தப் பெண் என்ன செய்யப்போகிறாளோ என மண்டையைப் பிய்த்துக் கொள்வார்களாம். அப்படி ஒரு பாத்திரம் மைத்ரேயிக்கு.

தற்போது மீண்டும் மைத்ரேயியைக் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. ஆம், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Never Have I Ever தொடரின் மூன்றாவது சீஸன் இன்று வெளியாக உள்ளது.

இன்னொரு விடயம் தொடரில் மைத்ரேயியின் அதாவது தேவியின் தாயாக நடித்துள்ள Poorna Jagannathan ஒரு இந்திய வம்சாவளியினர் ஆவார்.

கடைசியாக ஒரு சுவாரஸ்ய தகவல், Never Have I Ever தொடரின் நான்காவது சீஸனும் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதுதான் அது!  

poorna jagannathan