கனடாவில் பலராலும் பாராட்டப்படும் ஈழத்து இரட்டை சகோதரிகள்!

0
442

கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதி வருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் பகுதியில் வசிக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்களான சுரபி மற்றும் ஸ்வாதி அன்பழகன்.

19 வயதாகும் இவர்கள், இந்த இலையுதிர்காலத்தில் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல் படிப்பதற்காக இரண்டாம் ஆண்டில் நுழைகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறார்கள்.

எழுத்து மற்றும் மருத்துவ அறிவியல் இரண்டின் மீதான தங்கள் காதலை குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலமாக வெளிப்படுத்திவருகின்றனர். பிராம்ப்டனில் கோவிட் தொற்று கடுமையாக தாக்கியபோது கடந்த கோடை மாதங்களில் ஒரு தடுப்பூசி கிளினிக்கில் தன்னார்வலர்களான இருவரும் பணியாற்றியுள்ளனர்.

அப்போது தான் அவர்களின் முதல் புத்தகத்திற்கான யோசனை வந்தது. கிளினிக்கில் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களைப் பார்த்தபோது, ​​தடுப்பூசி போடுவது பற்றி குழந்தைகள் புத்தகத்தை உருவாக்க நினைத்தார்கள். இது குறித்து பேசிய சுரபி,

கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்! | Elam Twins Who Are Admired By Many In Canada

“பள்ளிக்குச் செல்ல முடியாததால் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு கடுமையாக மாறியது என்பதைப் பார்ப்பது அல்லது நிலைமையைப் புரிந்துகொள்வதுதான் சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க எங்களுக்கு உத்வேகம் அளித்தது” என்று கூறினார். அவர்கள் எழுதும் குழந்தைகள் புத்தகங்க தொடருக்கு Twin Tales.என பெயரிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் முதல் புத்தகமாக Ahana Got A Vaccine என்ற புத்தகத்தை எழுதினர். தொடர்ந்து, Mom, Dad! Please Get The Vaccine!, I am Beautiful மற்றும் The Race For Change ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளனர்.

ஐந்தாவதாக இப்போது தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி புத்தகம் எழுதி வருகின்றனர். இந்த புத்தகங்களை அவர்கள் பல தளங்களில் விற்பது மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாகவும் சுரபி மற்றும் ஸ்வாதி அனுப்பி வைக்கின்றனராம்.