கரடி பொம்மைக்குள் மறைந்திருந்த பிரிட்டன் திருடன்!

0
232

பிரிட்டன் நாட்டில் மகிழுந்து திருடன் ஒருவன் 5 அடி டெட்டி பியர் பொம்மையில் ஒளிந்திருந்த நிலையில் அவனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் நாட்டின் மான்செஸ்டர் நகர காவல்துறை கூறியதாவது அப்பகுதியைச் சேர்ந்த ஜோசுவா டாப்சன் என்ற 18 வயது இளைஞர் மகிழுந்து ஒன்றை திருடியுள்ளதோடு நிற்காமல் அந்த மகிழுந்துக்கு எரிவாயு நிரப்பி நிலையத்தில் பணம் தரமால் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் மே மாதத்தில் நடைபெற்ற நிலையில் கடந்த இரு மாதங்களாக இவரை பொலிஸார் வலைவீசி தேடி உள்ளனர்.

ஒரு வழியாக விசாரணையில் காவல்துறை ஜோசுவாவின் வீட்டின் முகவரியை தேடி கண்டுபிடித்துள்ள நிலையில் அவருடைய வீட்டிற்கு சென்று பார்வையிட்ட போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்துள்ளது.

கரடி பொம்மைக்குள் மறைந்திருந்த திருடன் | A Thief Hiding Inside A Teddy Bear

வீட்டின் பொருள்களை தூலாவி சோதனை மேற்கொண்ட போது தான் வீட்டில் இருந்த சுமார் ஐந்தடி டெட்டி பியர் பொம்மை விசித்திரமாக இருந்ததை காவல்துறையினர் கவனித்த போது இந்த பொம்மை மூச்சு விடுவது போல அவர்களுக்கு தோன்றியதால் அந்த பொம்மையை சோதனையிட்டு பார்வையிட்டுள்ளனர்.

அப்போது அதில் 6 அடி உயரம் கொண்ட ஜோசுவா இந்த 5 அடி டெட்டி பியரில் ஒளிந்து இருந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக அந்த டெட்டி பியர் பொம்மையை கிழித்து ஜோசுவாவை பிடித்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை மான்செஸ்டர் காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு இதனை 3000 பார்வையாளர்கள் பார்வையிட்டும் 500 பார்வையாளர்கள் தனது கருத்துக்களை தெரிவித்து இதனை தனது சமூக வலைதங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.