ஏமாற்றிய காதலனுக்கு காதலி கொடுத்த வினோத தண்டனை!

0
268

காதலில் இருந்த ஆண் ஒருவர் நம்பிக்கை மோசடி செய்தது பற்றி அறிந்த காதலி ஒருவர் தனது காதலனுக்கு வினோத தண்டனையை அளித்து இருக்கிறார்.

இதன்படி, உள்ளூரில் இருந்து வெளிவரும் “மெக்கே அண்டு விட்சண்டே லைப்” ( Mackay and Whitsunday Life ) என்ற பத்திரிகையில் காதலி ஒரு விளம்பரம் கொடுத்து இருக்கிறார். காதலன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று அறிந்த ஜென்னி (Jenny) என்ற பெயர் கொண்ட அந்த காதலி பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் டியர் ஸ்டீவ். நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என நம்புகிறேன். நீ எப்படிப்பட்ட மோசடி பேர்வழி என்று தற்போது ஒட்டுமொத்த நகரத்திற்கும் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு பத்திரிகையின் 4ம் பக்கத்தில் வெளியான விளம்பரத்தின் கீழே குறிப்பு ஒன்றும் உள்ளது. அதில் “இந்த விளம்பரம் உன்னுடைய கிரெடிட் கார்டு உதவியுடனேயே பிரசுரிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் அடங்கிய விளம்பர தகவலை தனது முகநூல் பக்கத்தில் அந்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ள நிலையில் அதில் விளம்பர தகவலுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர்.

அதில் “எங்களுக்கு ஸ்டீவ் எவரென தெரியாது. ஆனால், மிக மிக மோசம் வாய்ந்த ஆள் அவரென்று தெரிகிறது. ஜென்னியை பற்றிய எந்த தகவலையும் நாங்கள் வெளியிட போவதில்லை” என தெரிவித்து உள்ளனர்.

அத்தோடு இந்த முகநூல் பதிவை 50 ஆயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டு பலர் தமது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.