எங்களை ஆதரியுங்கள்; சர்வதேச சமூகத்திற்கு தைவானின் அழைப்பு!

0
788

‘ஜனநாயக தைவானை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும்’ என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen)அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Polosi) தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.

எங்களுக்கு ஆதரவு தாருங்கள்; சர்வதேச சமூகத்துக்கு தைவான் விடுத்த அழைப்பு! | Support Us Taiwan S Call To The International

நான்சியின் வருகை காரணமாக தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து சீனா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen)தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சீனா வேண்டும்மென்றே ராணுவ அச்சுறுத்தலை தைவானுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அளிக்கிறது.

எங்களுக்கு ஆதரவு தாருங்கள்; சர்வதேச சமூகத்துக்கு தைவான் விடுத்த அழைப்பு! | Support Us Taiwan S Call To The International

எங்களுடைய அரசும் ராணுவமும் சீனாவின் ராணுவம் போர் பயிற்சிகளை கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்பாட்டால் சீனாவிற்கு எதிராக தைவான் எதிர்வினை ஆற்ற தயாராக இருக்கிறது.

இதன்போது பிராந்திய பாதுகாப்புகாகவும் ஜனநாயக தைவானை ஆதரிக்கவும் சர்வதேச சமூகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்’ என தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) பதிவிட்டுள்ளார்.