போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ரஷ்யா!

0
103

போதைப்பொருள் கடத்தியதாக ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரிட்னி கிரைனர் (Brittney Griner) என்ற அந்த வீராங்கனை கடந்த பிப்ரவரி மாதம் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க ரஷ்யா சென்ற போது கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கிரைனரை பணையக் கைதி போல் வைத்து ரஷ்யா பேரம் பேசக்கூடும் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதன்போது கிரின்னருக்கு 9 ஆண்டுகள் சிறையும் ஒரு மில்லியன் ரூபிள் அபராதமும் விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ரஷ்யா! | Russia American Athlete To9 Years In Prison