பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்காத ரணில்!

0
116

பொதுமக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கத் தவறியதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசம்பர் வரை தொடரும் என்பதையே ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் உரையில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது கேள்விக்குரியாகியுள்ளது.

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்காத ரணில்! | Ranil Does Not Respond To The Public S Problems

டிசம்பர் மாதம் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் எனவும், இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச சேவை மற்றும் ஏனைய தொழில்களும் தடைபடும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கத் தவறியுள்ளார்.

அத்துடன் கடந்த கால பிரச்சினைகளை மறந்துவிடுமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இளைஞர்கள் தலைமையிலான மக்கள் போராட்டம் ஒரு மாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி தவறிவிட்டார். அமைதியான போராட்டக்காரர்களை CID, STF மற்றும் பொலிஸார் வேட்டையாடுவதாகவும் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை கைவிடுமாறு அதிகாரிகளுக்கு ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.