1000 பவுண்டுகளுக்கான சாக்லேட் மொத்தமாக உருகி சேதம்: உடைந்த உரிமையாளர்

0
537

பிரிட்டனில் சாக்லேட் கடை ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த மொத்த சாக்லேட்டும் உருகி வழிந்த சம்பவம் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டனில் ஸ்கந்தோர்ப் பகுதியில் அமைந்துள்ள சாக்லேட் கடையில் 1,000 பவுண்டுகள் மதிப்பிலான சாக்லேட்டுகள் மொத்தமாக உருகி சேதமாகியுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக குளிர்சாதனங்கள் வேலை செய்யாமல் போகவே சாக்லேட்டுகள் சேதமாகியது என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி தற்போது கடையில் இருந்த சாக்லேட்டும் சேதமாகவே கடை உரிமையாளரின் மகள் நடந்ததை கூறி இணையத்தில் உதவி கோரியுள்ளார்.

1000 பவுண்டுகளுக்கான சாக்லேட் மொத்தமாக உருகி சேதம்: உடைந்து போன உரிமையாளர் | Heatwave Causes Chocolate Melt

இதனையடுத்து பலரும் தங்களால் இயன்ற உதவியை அளிக்க முன்வர தற்போது 450 பவுண்டுகள் வரையில் நிதி திரட்டப்பட்டுள்ளது. முகம் தெரியாத அறிமுகமற்றவர்களும் தங்கள் நிலை அறிந்து உதவ முன்வந்துள்ளது மிகப்பெரிய ஆறுதல் என குறிப்பிட்டுள்ள அந்த குடும்பம் நன்றி கூற வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளாக குறித்த சாக்லேட் கடையை நடத்தி வந்துள்ளனர் ஸ்டீபன் மற்றும் லிண்டா எல்லிஸ் தம்பதி. இந்த ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாகவே இப்படியாக இரு நெருக்கடி ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், காப்பீடு பிரீமியம் தொகை அதிகரிப்பு காரணமாக இழப்பீடு கேட்டு முறையிடவும் இயலாமல் போயுள்ளது என்றனர்.