கனடாவில் மலை சிங்கத்திடம் இருந்து 7 வயது மகனை மீட்ட தாய்

0
107

கனடாவில் அல்பர்ட்டா மாகாணத்தின் எட்மோன்டனில் மலைச் சிங்கம் எனப்படும் கூகர் தாக்கியதில் ஏழு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

கார்சன் பியூசன் என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு மலைச்சிங்கத்தினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளான். எட்மோன்டனில் அமைந்துள்ள சிற்றோடை ஒன்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கும்பத்தினருடன் சிற்றோடைக்கு அருகாமையில் முகாமிட்டு தங்கியிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பியூசரின் தாயாரான ச்சாய் பியூசர் தெரிவிக்கின்றார்.

மலைச் சிங்கம் தனது மகனின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளை தாக்கியதாகவும் ஏனைய பிள்ளைகள் கூச்சலிட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஏழு வயது மகனை தாக்கிய மலைச் சிங்கத்தின் தலையின் மீது தாம் தாக்கியதாகவும் அதன் காரணமாக அது அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பியூசன் எட்மோன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பகுதிகளுக்கு செல்லும் போது வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.