செஸ் போட்டியைக் காண 40 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை

0
482

44வது உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின்  மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 40 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

மாமல்லபுரத்தில் 2 அரங்குகளில் நடைபெறும் சதுரங்க போட்டிகளைக் காண இணையதளத்தின் வாயிலாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதோடு இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என தனித் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

மொத்தமாக 6500 டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் தற்போது வரை 3700 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியப்பட்டுள்ளது.