பிரித்தானியா வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி!

0
101

பிரித்தானியா வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதம் 31-ம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பிரித்தானியாவில் உள்ள ராயல் தங்கசாலை விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி! | Uk Releasen Gold Bar Engraved Image Lord Ganesha

விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 20 கிராம் உள்ளது. விலை 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க கட்டி ராயல் தங்க சாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு லட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டு இருந்தது.

மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிவிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.