மருத்துவரின் சேவைக்காக பத்திரிகை விளம்பரம் செய்த கனடிய முதியவர்!

0
405

மருத்துவர் ஒருவரின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கனேடிய முதியவர் ஒருவர் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 82 வயதான மைக்கல் மோர்ட்ஸ் என்ற முதியவரே இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

நீண்ட காலமாக குடும்ப மருத்துவராக சேவை வழங்கி வந்த மருத்துவர் ஓய்வு பெற்றுக்கொள்வதாக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்துள்ளார்.

ஆறு மாத காலத்தில் மருத்துவர் ஒருவரை தேடிக் கொள்ள முடியாத காரணத்தினால் அவர் இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றி மருந்தகங்களில் தமக்கு மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் வான்கூவார் தீவுகளில் மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அனுமதிப்பத்திரம் உடைய மருத்துவர் தேவை மருந்து சீட்டுக்களை எழுதும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நியாயமான கொடுப்பனவு வழங்கப்படும்” என பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் சில பகுதிகளில் குறிப்பாக தீவுகளில் மருத்துவர்களின் சேவை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.