கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0
481

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் எந்த சலுகையும் விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) நேற்று தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கியுள்ளார்.

vivian balakrishnan

பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எந்தவித சலுகைகளோ விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என்று பாலகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக ஜூலை 14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் முன்னர் கூறியது. தனது குறுகிய கால வருகை வீசாவை நீடித்த நிலையில் அவர் ஆகஸ்ட் 11 வரை அவர் சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | The Announcement Singaporean Government Gotabaya

தனது நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் மற்றும் சிங்கப்பூர் வருவதற்கு முன்பு மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி தலைமறைவாகவில்லை என்றும் அவர் இலங்கை திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்துக்கு ஏற்ப நடத்தப்படுவார் என்றும் இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இதன்போது சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே கோட்டாபய ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றார் என்று சிங்கப்பூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.