யாழில் பெண்களுக்கு தனி வரிசை! அரச அதிபர் நடவடிக்கை!

0
582

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என 3 வரிசைகளில் எரிபொருள் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட செயலாளர் க.மகேசன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

அந்தந்த பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு மக்களை செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என 3 வரிசைகளில் எரிபொருள் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரிபவர்களின் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களை மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறுத்த அனுமதிக்கப்படும். ஏனையவர்களின் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் அகற்றப்படும்.

சுற்றுலா பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து நாடு திரும்பவுள்ளவர்களிற்கான எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக இலங்கை போக்குவரத்து சபையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.