அல் கைதா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஸவாஹிரி படுகொலை

0
509

அல் கைதா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஸவாஹிரி, ஆப்கானிஸ்தானின் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்

தலைநகர் காபூலில் சிஐஏவினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அய்மன் அல் ஸவாஹிரி கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பலியான அல் கைதாவின் தலைவர்! | Al Qaayman Al Zawahiri Has Been Killed

வீடொன்றின் பெல்கனியில் இருந்த அய்மன் அல் ஸவாஹிரி மீது இரு ஏவுகணைகள் ஏவப்பட்டன என கூறப்படுகின்றன.

அல் கைதான இயக்கத்தின் ஸ்தாபகர் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஸவாஹிரி. 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கைதா தலைவராக அல் ஸவாரி நியமிக்கப்பட்டார்.

அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

அல் ஸவாஹிரி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும் எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும். இரட்டைக் கோபுர தாக்குதலை என்றுமே மறக்க மாட்டோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு” என்றார்.