ஜப்பானில் வளர்ப்பு பிராணிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஆடை!

0
517

ஜப்பானில் வெப்ப அலையில் இருந்து வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க மின்விசிறியுடன் கூடிய பிரத்யேக ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானில் வழக்கத்தை விட விரைவாக மழை காலம் நிறைவுற்றதால் இதுவரை இல்லாத வகையில் வெகு நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது.

35 டிகிரி வெயிலை தாங்க முடியாமல் வளர்ப்பு பிராணிகள் சோர்வடைவதால் வெப்பத்தை தணிக்கும் வகையில் 80 கிராம் எடையிலான பேட்டரி மின்விசிறி இணைத்து தைக்கப்பட்ட ஆடைகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 6,000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஆடை வளர்ப்பு பிராணி உரிமையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.