கிறிஸ் ராக்கிடம் மீண்டும் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!

0
129

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின்போது காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை (Chris Rock) கன்னத்தில் அறைந்ததற்காக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (Will Smith) மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவி ஜடா பிங்கெட்டை (Jada Pinkett) கிறிஸ் ராக் (Chris Rock) கேலி செய்ததால் அவரை வில் ஸ்மித் (Will Smith) கன்னத்தில் அடித்தார்.

கிறிஸ் ராக்கிடம் மீண்டும் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்! | Will Smith Apologized To Chris Rock Again

மார்ச் மாதம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வில் ஸ்மித் ஏற்கனவே மன்னிப்பு கோரியிருந்த நிலையில் மீண்டும் மன்னிப்பு கோரி தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் தனது செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கிறிஸ் ராக்கை (Chris Rock) தொடர்பு கொண்ட நிலையில் அவர் பேச தயாராக இல்லை என கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.