விலை மாதுக்களாக மாறும் இலங்கைப்பெண்கள்!

0
144

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் பலர் விலை மாதுக்களாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மக்கள் கடும் நெருக்கடியையும் பட்டினி அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். தற்போதைய சூழ்நிலையால் உண்டான நெருக்கடி பல குடும்பங்களை வாழ்வின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது.

பெருமளவு இலங்கையர்கள் தங்கள் குடும்பங்களை கவனிப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். உணவையும் அத்தியாவசிப் பொருட்களையும் பெறுவதில் அவர்கள் நாளாந்த பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

மிகமோசமான பொருளாதார நெருக்கடி;  விலை மாதுக்களான  இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women

இந்த மோசமான நிலைமை நாட்டில் புதிய தகாத விடுதிகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக பெண்கள் தங்களையே விற்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக பாலியல் தொழில் 30 வீதமாக அதிகரித்துள்ளது என பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஸ்டான்ட் ஒவ் மூவ்மென்ட் லங்கா தெரிவித்துள்ளது.

இந்த விடுதிகளில் சில ஸ்பாக்கள் போல இயங்குகின்றன. தங்கள் குடும்பத்திற்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கு இதுவே ஒரே வழியாக உள்ளது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில்புரிந்த பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என அசிலா தந்தெனிய ஏஎன்ஐக்கு தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியால் பல பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை நாங்கள் அவதானித்துள்ளோம். அனேகமானவர்கள் ஆடைதொழிற்துறையை சேர்ந்தவர்கள் கொவிட் காரணமாக ஆடை தொழில்துறை பாதிக்கப்பட்டது பலர் வேலை இழந்தனர்.

மிகமோசமான பொருளாதார நெருக்கடி;  விலை மாதுக்களான  இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women

தற்போதைய நெருக்கடி வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 21 வயது ரெஹான (பெயர்மாற்றப்பட்டுள்ளது) தனது நிலை குறித்து ஏஎன்ஐக்கு இவ்வாறு தெரிவித்தார். ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த தான் எவ்வாறு பாலியல் தொழிலாளியாக மாறினேன் என்பதை அவர் விபரித்தார்.

ஏழு மாதங்களிற்கு முன்னர் தனது தொழிலை இழந்த அவர் பல மாத இயலாமையின் பின்னர் பாலியல் தொழிலாளியாக மாறியுள்ளார். கடந்த டிசம்பரில் ஆடைத்தொழிற்சாலையில் நான் எனது வேலையை இழந்தேன். அதன் பின்னர் நாளாந்த அடிப்படையில் இன்னொரு தொழில் புரிந்தேன். ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கு செல்வேன். ஆனால் தொடர்ச்சியாக வேலை இல்லாததன் காரணமாக என்னால் உரிய வருமானத்தை பெற முடியவில்லை. அதோடு கிடைத்த வருமானமும் எனது குடும்பத்தை பராமரிக்க போதுமானதாகயில்லை.

பின்னர் ஸ்பா உரிமையாளர் என்னை அணுகினார். தற்போதைய நெருக்கடியால் நான் பாலியல் தொழிலாளியாக மாற தீர்மானித்தேன். அவர் விடுத்த வேண்டுகோளை எனது மனம் ஏற்க மறுத்தது ஆனால் எனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டது என அவர் தெரிவித்தார். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 41 வயது ரோசியும் ஒருவர் (பெயர் மாற்றம்) ஏழு வயது பிள்ளையின் தாயான அவர் விவகாரத்து பெற்றவர் தற்போது பிள்ளையின் கல்விக்காக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

மிகமோசமான பொருளாதார நெருக்கடி;  விலை மாதுக்களான  இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women

பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் போதுமானதாகயில்லை. எனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் போதாது. இதன் காரணமாகவே நான் இதனை தெரிவுசெய்தேன். நான் கடையொன்றை நடத்துகின்றேன் அதனை தொடர்ந்து நடத்துவதற்கு பணம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மாதாந்தம் 15000 முதல் 20000 வரை உழைத்த பெண்கள் தற்போது நாளாந்தம் அதே பணத்தை உழைக்கின்றனர் இதுவும் அவர்கள் இந்த தொழிலை தெரிவு செய்வதற்கு ஒரு காரணம் என கூறப்படுகின்றது. பல பாலியல் தொழிலாளர்கள் தங்கள் ஆண் சகாக்களுடன் வாழத்தொடங்கினார்கள் ஆனால் நெருக்கடியால் ஆண்கள் அவர்களை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அது மட்டுமல்லாது பலர் கர்ப்பிணிகளாக உள்ளனர் தற்போது இரண்டு பெண்கள் கர்ப்பிணிகளாக உள்ளனர் நாங்கள் அவர்களை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் அரசாங்க தரப்பிலிருந்து எந்த உதவியும் இல்லை என எஸ்யுஎம்எல்லின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.