கூகுளால் 39 முறை நிராகரிப்பு; அயராது முயற்சித்த இளைஞனுக்கு வெற்றி!

0
450

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த டைலர் கோஹன் (tyler cohen) என்பவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜராக ஸ்ட்ராட்டஜி & ஆபரேஷன் (Strategy & Ops) பிரிவில் பணிபுரிந்து வந்தவர்.

ஆனால் அவருக்கு தொழில்நுட்ப உலகின் உச்சத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. இதற்காக அவர் (tyler cohen) பல முறை தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்குத் தனது resume-யை அனுப்பி விண்ணப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

கடந்த 2019-ல் விண்ணப்பிக்க ஆரம்பித்த இவர் நான்கு வருடங்களாக 39 முறை ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளாராம். எனினும் மனம் தளராமல் டைலர் கோஹன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

இறுதியாக 39 வது முறை அவர் விண்ணப்பித்தபின் கூகுள் அவருக்கு பதிலளித்துள்ளது. அதன் பின்னர் கடந்த ஜூலை 19 -ம் தேதி அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது.

39 முறை நிராகரித்த Google;மனம் தளராமல் முயற்சி செய்த  இளைஞருக்கு கிடைத்த வெற்றி! | Rejected39 Times By Google Success Young Man

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்த அவர் (tyler cohen) கூகுள் அனுப்பிய நற்செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தார்.

அதில் “விடாமுயற்சிக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் அளவுதான் வித்தியாசம் இருக்கிறது. அதை அறிய நான் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். 39 நிராகரிப்புகள், 1 ஏற்பு” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையயில் அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.