ராஜபக்ச தொடர்புகள் ஆபத்து; உலகின் முன்னணி நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை!

0
548

புதிய அரசாங்கத்துடனான ராஜபக்ஷ தொடர்புகள் காரணமாக இலங்கை மேலும் அரசியல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

உலகின் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான Fitch Ratings இவ்வாறு இலங்கையை எச்சரித்துள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அந்த நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்ஷ தொடர்புகள் ஆபத்து;  இலங்கைக்கு  உலகின் முன்னணி  நிறுவனம் எச்சரிக்கை! | Rajapaksa Connections Risk Warns Sri Lanka

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைப் பெற்றுள்ளதுடன் அவரது அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

இந்த பெரும்பான்மை சக்தியானது பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனை மீட்டெடுக்க தேவையான கடினமான சீர்திருத்தங்களில் சில ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ராஜபக்ஷ தொடர்புகள் ஆபத்து;  இலங்கைக்கு  உலகின் முன்னணி  நிறுவனம் எச்சரிக்கை! | Rajapaksa Connections Risk Warns Sri Lanka

எனினும் நாடாளுமன்ற நிலைப்பாடு வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு பலவீனமாக உள்ளதாகவும் Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் கடந்த ஆட்சியில் பிரதமராக இருந்தவர் என்பதுடன் எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய கூட்டணியின் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.