எரிபொருள் நெருக்கடியால் யாழில் புதிய தொழில் முயற்சி!

0
192

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியால் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. நாளைய தினம் எரிபொருள் பெற வேண்டுமானால் முதல் நாளே வாகனங்களை வரிசையில் விட வேண்டும்.

எரிபொருள் நெருக்கடியால் யாழில் இடம்பெறும் புதிய தொழில் முயற்சி! | New Business Venture Jaffna Due To The Fuel Crisis

அத்துடன் ஒரு நாள் முழுவதும் வாகனத்தை காவல் காக்க வேண்டும். அப்போது தான் மறுநாள் எரிபொருள் பெறக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் யாழில் புதிய வியாபாரம் ஒன்று ஆரம்பித்துள்ளது.

அதாவது எரிபொருள் வரிசையில் முதல் நூறு எண்ணிக்கைக்குள் இடம் பிடித்துக் கொடுத்தால் 1000 ரூபா நபர் ஒருவருக்கு கூலியாக வழங்கப்படுகிறது.

எரிபொருள் நெருக்கடியால் யாழில் இடம்பெறும் புதிய தொழில் முயற்சி! | New Business Venture Jaffna Due To The Fuel Crisis

நாள் முழுவதும் அந்த இடத்திலேயே தங்கி நின்று மோட்டார் சைக்கிளை பாதுகாத்து மறுநாள் காலை உரிமையாளரிடம் இடத்தையும் வாகனத்தையும் ஒப்படைத்தல் 1500 ரூபா கூலியாக வழங்கப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியால் பலர் தொழிலை இழந்துள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் யாழில் புதிய தொழில் முயற்சிகள் அதிகரித்துள்ளன.