என் வீட்டைக் கட்டித் தாருங்கள்; போராட்டக்காரர்களிடம் அடம்பிடிக்கும் ரணில்!

0
405

“வீடில்லாதவனை வீட்டுக்குப் போகச் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. முதலில் ஊரைக் கட்டுங்கள் அல்லது என்னுடைய வீட்டைக் கட்டித் தாருங்கள்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டியிலிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

போராட்டக்காரர்களிடம் அடம்பிடிக்கும் ரணில்! | Build Me A House Dear Ranil

குறித்த உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று சிலர் சொல்கிறார்கள். போகச் சொல்லுங்கள். எனக்கு வீடு இல்லை. எனது வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள். நான் போன பிறகு ரணிலை வீட்டுக்குப் போகச் சொல்லுங்கள்.

வேண்டுமானால் 6 மணிக்குப் பிறகு பெரும் கூட்டத்தை அழைத்து வாருங்கள். வீடில்லாதவனை வீட்டுக்குப் போகச் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இரண்டில் ஒன்று. ஊரைக் கட்டுங்கள் அல்லது என்னுடைய வீடு கட்டுங்கள்.

ஆனால் வீட்டுக்குப் போகச் சொல்லாதீர்கள். பழைய அரசியலில் இருக்கிறோம். அது தான் பாரம்பரியம். அவர்கள் அவரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள் எனவும் ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.