இலங்கை மக்களுக்கு உதவ தயாராக உள்ளோம்; இந்தியாவின் புதிய ஜனாதிபதி

0
118

இலங்கை மக்களுக்காக இந்தியா உதவி செய்ய தயாராகவுள்ளதாக இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு  தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிற்கு அவர் தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் பதிவிட்டுள்ளது.

இதேவேளை மக்களின் ஆழமான உறவுகளின் அடிப்படையில் நீண்டகால இருதரப்பு கூட்டாண்மை மேலும் வலுவடையும் என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு  உதவ தயாராகவுள்ளோம் | We Are Ready To Help The People Of Sri Lanka