ஜனாதிபதி ஆசனத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! ஜனாதிபதி அதிரடி

0
316

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலச்சினை முதல் முறையாக அகற்றப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக அந்த ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிங்கள வார இதழொன்று வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் தலைமையிலான நாடாளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதி கூடவுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்கி ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றவுள்ளார். சபாபீடத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தே ஜனாதிபதி உரையாற்றுவார்.

இந்நிலையில் அந்த ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலட்சியையே அகற்றப்படவுள்ளது. அதேவேளை ஜனாதிபதியை விளிக்கும் போது இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு விடுத்திருந்தமை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.