யாழில் அலைபேசி திருட்டு கும்பல் சிக்கியது!

0
131

யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைதான சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 அலைபேசிகளும் ஒன்றரை பவுன் நகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மக்களை கிலிகொள்ளவைத்த கும்பல் சிக்கியது! | Gang People Of Jaffna Laugh Was Caught

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.