1000 கோடிக்கு இங்கிலாந்தில் சொத்து வாங்கிய இந்திய தொழிலதிபர்!

0
152

DHFL மற்றும் ரேடியஸ் குழுமத்திலிருந்து முறைகேடாக பெறப்பட்ட நிதி மூலம் இங்கிலாந்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தொழிலதிபர் அவினாஷ் போசலே (Avinash Bhosale) வாங்கியதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

எஸ் வங்கி மற்றும் DHFL குழுமம் பல்வேறு நிறுவனங்களுக்கு பல நூறு கோடிகளை முறைகேடாக கடனாக வழங்கி ஊழல் செய்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வந்தது.

இங்கிலாந்தில் ரூ1,000 கோடிக்கு சொத்து வாங்கிய இந்திய தொழிலதிபர்! | Indian Businessman Who England Rs1000 Crore

இதில், ஏபிஐஎல் குழும நிறுவனர் அவினாஷ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், டிஎச்எஃப்எல் மற்றும் ரேடியஸ் குழுமத்திடமிருந்து முறைகேடாக 300 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் (Rana Kapoor) உதவியுடன் முறைகேடாக பெற்ற 700 கோடி ரூபாய் நிதியும் சொத்துகள் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Rana Kapoor