தாயை கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம் என கோரிய மகள்கள்! ; நீதிமன்றம் நிராகரிப்பு

0
165

அமெரிக்காவின் அலபாமாவில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

தனது முன்னாள் காதலியான பெய்த் ஹால் என்ற பெண்ணை படுகொலை செய்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

ஜோ நாதன் ஜேம்ஸ் ஜுனியர் என்ற 50 வயதான நபருக்கு நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

தெற்கு அலபாமா சிறைச்சாலையில் குறித்த கைதிக்கு விஷ ஊசி ஏற்றி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையாளிக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என கொலையுண்ட பெண்ணின் பிள்ளைகள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

குறித்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் போதும் என கொலையுண்ட ஹாலின் இரண்டு மகள்களும் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

எனினும், இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் கொலையாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.