கியூபாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அரிய வகை புலிக் குட்டி

0
118

கியூபாவின் ஹவானா பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள அரிய வகை வங்காளப் புலிக் குட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பிறந்த 4 புலிக்குட்டிகளில் இது மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் மற்றவை நரம்பியல் பாதிப்புகளால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த புலிக்குட்டியும் எடைக்குறைவாக இருப்பதால் செயற்கை இனப்பெருக்க பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அது மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.