இலங்கையின் தற்போதைய நிலைக்கு நாங்கள் காரணமில்லை! – சீனா

0
400

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்க நாங்கள் காரணமில்லை என சீனா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இதுவரை காணாத கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

பெற்றோல், டீசல் பற்றாக்குறையால் அங்குள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர். அத்தியாவசிய மருந்து பொருட்கள் கூட இல்லாமல் அவல நிலைக்கு இலங்கை பொருளாதாரம் சென்றது.

700 மில்லியன் டாலர் கடன் உதவி வெளிநாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திவால் நிலையை அறிவித்த இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடியது.

இத்தகைய இக்கட்டான சூழலில் இலங்கைக்கு அதன் அண்டை நாடான இந்தியா கடனுதவி அளித்தது. 700 மில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை அளித்த இந்தியா அதன் அடிப்படையில் எரிபொருள் உள்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு உதவியது.

ஆனால், இலங்கையில் பெருமளவு முதலீடு செய்து இருக்கும் சீனா எதிர்பார்த்த அளவுக்கு உதவவில்லை. ஏனெனில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஷ சகோதரர்கள் சீனா முதலீடுகளுக்கு கதவை திறந்து விட்டனர்.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

குறிப்பாக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு இலங்கை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது. இலங்கையின் இந்த செயல் இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி பல திட்டங்களை சீன நிறுவனங்களுக்கு வாரி வழங்கியது.

அதேபோல், சீனாவும் அதிக வட்டிக்கு கடன் அளித்து இலங்கை நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்தன.

இலங்கையின் மொத்த கடனில் 10 சதவீதம் அளவுக்கு சீனாவின் கடன்கள் உள்ள நிலையில் கடனுக்கு சலுகை அளிக்க சீனா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

இந்த சூழலில் அமெரிக்க அதிகாரி சமந்தா பவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

சீனா இலங்கைக்கு அதிக வட்டியில் கடன் வழங்கி இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் 2000-ம் ஆண்டின் மத்தியில் இருந்து இலங்கைக்கு சீனா கடன் வழங்குவதில் முன்னணியில் இருப்பதாகவும் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

இதற்கு பதிலளித்த லிஜியான்,

சீனா – இந்தியா இடையேயான எதார்த்த ஒத்துழப்பானது அறிவியல் பூர்வமான திட்டமிடுதலுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது.

சீனா இலங்கைக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால கடன்களே வழங்கியது. இலங்கையின் உள்கட்டமைப்பையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த இது முக்கிய பங்கு வகித்தது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

அமெரிக்கா திடீரென வட்டி விகிதங்களை உயர்த்தியதால் உலக பொருளாதாரம் மற்றும் நிதி சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அமெரிக்காவின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளும் தொழில்துறை விநியோக சங்கிலியை பாதித்தது.

இதனால், எரிசக்தி துறை, உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலையும் மோசமான அளவில் அதிகரித்தது” என்றார்.