கனேடிய தாயிடம் மன்னிப்பு கேட்ட உக்ரைன் தளபதி

0
366

உக்ரைனில் ரஷ்ய இராணுவ டாங்கியால் கொல்லப்பட்ட கனேடிய வீரர் தொடர்பில் அவரது தாயாரிடம் உக்ரேனிய தளபதி ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் படுகாயமடைந்த சக வீரரை காப்பாற்றும் முயற்சியில் கனேடிய வீரர் 31 வயதான Emile-Antoine Roy-Sirois கொல்லப்பட்டார். ஜூலை 18ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ரஷ்ய டாங்கியில் சிக்கி கனேடிய வீரருடன் மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ரஷ்ய படையெடுப்பிற்கு பின்னர் உக்ரைனில் கொல்லப்படும் முதல் கனேடிய வீரர் இவர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவரது சடலமானது மத்திய உக்ரைன் நகரமான Dnipro-வில் சவக்கிடங்கு ஒன்றில் பாதுகாக்கப்படுவதுடன் கனேடிய தூதரகத்தின் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி அவரது சடலத்தை கனடாவுக்கு எடுத்துச் செல்லும் அனைத்து செலவையும் தாங்களே ஏற்பதாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தளபதி Ruslan தலைமையிலேயே கனேடிய வீரர்கள் இருவர் போரிட்டு வந்துள்ளனர்.

மன்னித்து விடுங்கள்; கனேடிய தாயாரிடம் வருத்தம் தெரிவித்த  உக்ரேனிய தளபதி | Ukrainian Commander Mourns Canadian Mother

அதில் ஒருவர் தற்போது கொல்லப்பட்டுள்ள நிலையில் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தை தொடர்புகொண்டு தளபதி Ruslan இது குறித்து தகவல் அளித்துள்ளார் .

எனினும் சம்பவம் குறித்து கனடா தரப்பில் இருந்து இதுவரை உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்ட கனேடிய வீரரின் குடும்பத்தினரின் முடிவை அறிய தாம் காத்திருப்பதாகவும் தளபதி Ruslan தெரிவித்துள்ளார்.

மன்னித்து விடுங்கள்; கனேடிய தாயாரிடம் வருத்தம் தெரிவித்த  உக்ரேனிய தளபதி | Ukrainian Commander Mourns Canadian Mother

மேலும் இந்த சம்பவத்திற்கு Sirois-ன் தாயாரிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவரை காப்பாற்ற தம்மால் முடியாமல் போயுள்ளது எனவும் தளபதி Ruslan தெரிவித்துள்ளார்.  

Ruslan Khomchak