‘கிம்புல அலே குணா’ வின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த இருவர் கைது!

0
139
‘கிம்புல அலே குணா’ வின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 06 கிலோ 440 கிராம் கேரள கஞ்சா, 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட எம் 67 கைக்குண்டு என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு 15, மாதம்பிட்டிய வீதியைச் சேர்ந்த 45 வயதான ஹைகோர்ட் ராஜா என அழைக்கப்படும் அங்கமுத்துராஜா மற்றும் 32 வயதான நாகராஜா ரொபின் நிக்லஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.