பட்டியினால் வேகமாக உயிரிழக்கும் மக்கள்… சூடானின் பரிதாப நிலை!

0
449

சூடான் உலகில் அதிக உணவுத் தேவைகளில் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தில் இருக்கின்றது.

அந்நாட்டில் உணவுத்தேவை எல்லை மீறி போவதாகவும் மக்கள் பட்டியினால் இறக்கும் நிலை வேகமாக அதிகரித்து வரும் நிலையிலும் மற்றும் போஷாக்கற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையும் காணப்படுகின்றது.

பட்டியினால் வேகமாக உயிரிழக்கும் மக்கள்... வெளிநாடொன்றில் பரிதாப நிலை | Sudan People Are Dying Fast From The Food Crisis

சுமார் 2 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் உலக உணவு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலக வங்கி உலக உணவு செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை அவசர நிதியுதவியாக கொடுத்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி நிதியுதவியினால் சூடானின் உணவு பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் மேலும் சூடானின் உணவுத் தேவையை நிரந்தரமாக குறைப்பதற்கு மாற்று வழிகள் குறித்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக உலக உணவுத் திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.