100 ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் காணப்பட்ட முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கனடிய வீரர்

0
589

முதலாம் உலகப் போரில் உயிரிழந்த கனேடிய படைவீரர் ஒருவர் 100 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒரு நூற்றாண்டு காலப்பகுதியின் பின்னர் குறித்த கனேடிய படை வீரர் ( Sgt.-Maj. David George Parfitt ) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கனடிய தேசிய பாதுகாப்பு மற்றும் கனடிய ஆயுதப்படை திணைக்களம் என்பன இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பிரான்ஸின் தீபவள் ரிட்ஜ் போரில் இந்த படைவீரர் பங்கேற்றுள்ளார்.

100 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடிய வீரர் | First World War Canadian Soldier Identified

சாஜன் மேஜர் டேவிட் ஜார்ஜ் பார்பிட்  (Sgt.-Maj. David George Parfitt )  என்ற நபரை இவ்வாறு போரில் பங்கேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது 25ஆம் வயதில் இந்த படைவீரர் உயிரிழந்துள்ளார்.

(Sgt.-Maj. David George Parfitt )  பார்பிட் இங்கிலாந்தின் லண்டன் நகரில் 1891 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தனது பதினெட்டாம் வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்து உள்ளார் கனடாவில் ஆலயங்களில் கடமை ஆற்றிக் கொண்டிருந்தபோது முதலாம் உலகப் போரில் படைவீரராக இணைந்து கொண்டுள்ளார்.

பார்பிட்டின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கனடிய ராணுவம் தெரிவித்துள்ளது.