உள்ளாடையுடன் கட்டப்பட்டுள்ள விமானப்படை வீரர்; வெளியானது பொய்யான செய்தி!

0
179

தமிழ் பேசும் மக்கள் மீது சிங்கள மக்களை இனவாத ரீதியாகக் குரோதத்தை தூண்டிவிடும் முயற்சிகள் சில விசமிகள் முன்னெடுத்துள்ளனர்.

நேற்றையதினம் இலங்கையில் சில இணையத்தளங்கள் மற்றும் வலைதளங்களிலும் வெளியாகியதாகக் கூறப்படும் ஒரு விமானப்படை வீரரை உள்ளாடையுடன் கட்டி வைத்து பின்னால் தமிழில் ஒரு பதாதை எழுதி வைத்திருந்த மாதிரியான செய்தி போலியாது என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் எம் படைகளை மீது கை வைக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதை காட்டுவதே இதன் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் இனவாதத்தைத் தூண்டிவிடலாம் என்பதே அந்த விசமிகளின் நோக்கம்.

எனினும் குறித்த செய்தி தொடர்பில் உடனடியாக விமானப்படையிடம் இது தொடர்பாக கேட்டு இது பொய்யான செய்தி எனும் விடயத்தையும் செய்ற்பாட்டாளர்கள் பெற்று விட்டார்கள்.

ஆனாலும் இவ்வாறான பொய் செய்திகளை அல்லது தகவல்களை உருவாக்குவதன் மூலமாக அல்லது பரப்புவதன் மூலமாக தமது எண்ணங்களை அடைய முயற்சிக்கிறார்கள். எனவே பொதுமக்கள் இவ்வாறான செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாகவும் அவதானிப்போடும் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளாடையுடன் கட்டி வைக்கப்பட்ட விமானப்படை வீரர்; வெளியான போலிச்செய்தி! | Act Of Inciting Hostility Published Fake News

சம்பவத்தின் பின்னனி

ரிதிதென்னை பகுதியில் நேற்று காலையில் வீதி சோதனையில் ஈடுபட்ட வாழைச்சேனை பொலிஸார், ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில் உள் ஆடையுடன் ஆண் ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது அங்கே கட்டப்பட்டிருப்பவர் விமானப்படை வீரர் என தெரியவந்துள்ளதுடன் மரத்தில் “முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்” என வாசம் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரை மீட்டு உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து விமானப் படை வீரரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,

அவர் மட்டக்களப்பு விமானப் படை படை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாவே எனத்தெரிய வந்தது. படை முகாமில் இருந்து விடுமுறைக்காக வீடு சென்றவர் புதன்கிழமை காலை ஹட்டன் பஸ்நிலையத்தில் இருந்து மகியங்கனைக்கு செல்லும் பஸ்ஸில் பிரயாணித்து மாலை 3.15 மகியங்கனைக்கு வந்தடைந்துள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து பொலனறுவை பஸ்வண்டியில் பிரயாணித்து செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை மாலை 6.30 வந்தடைந்துள்ள நிலையில் மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோர் தனது தலையில் தாக்கி தனது முகத்தை மூடி பின்னர் தன்னை அந்த வாகனத்தில் ஏற்றிகொண்டு சுமார் 2 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் அவரின் ஜீன்ஸ், சேட் என்பவற்றை கழற்றி உள் ஆடையுடன் காலையும் கையையும் கயிற்றால் கட்டி மரத்துடன் தன்னை கட்டியதுடன் அந்த மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள் என வாசகத்தை எழுதி தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் பிரிஸ்டல் போட்டில் எழுதி தொங்கவிட்டுவிட்டு பின்னர் உடைகளை கழற்றிவிட்டு உள் ஆடையுடன் தன்னைதானே கயிற்றால் கட்டி கொண்டு நாடகமாடியமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery