உலகம் மோசமான அணு ஆயுதப் போரை நெருங்கிக் கொண்டிருக்கிறது – பிரிட்டிஷ்

0
66
India today successfully test fired for the second time it's long range nuclear capable Agni-5 missile that has a range of over 5000 kilometres. India now joins the select club of nations like United States, UK, Russia, France and China that have the capability to operate a missiles across continents, striking at will in Europe, Asia and Africa. The missile can carry a 1000 kg nuclear warhead and has three rocket motors and was launched from Wheeler Island in India. (Photo by Pallava Bagla/Corbis via Getty Images)

உலகம் மோசமான அளவில் அணு ஆயுதப்போரை நெருங்கிக்கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளார் பிரித்தானிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்.

உலகம் ஆபத்தான அளவில் அணு ஆயுதப்போரை நெருங்கிக்கொண்டிருக்கிறது, அதன் பின்னணியில், ரஷ்யா, சீனா, ஈரான் முதலான நாடுகள் உள்ளன என்கிறார் பிரித்தானிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரானசர் ஸ்டீபன் லவ்க்ரோவ் (Sir Stephen Lovegrove).

அணு ஆயுதப் போரை நெருங்கும் உலகம்; பிரித்தானிய எச்சரிக்கை! | A World Approaching Nuclear War British Alert

பனிப்போர் காலகட்டத்தின் போது அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது நேட்டோ அமைப்பும் ரஷ்யாவும் தங்களுக்குள் பரஸ்பர புரிதலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முடிந்தது.

ஆனால், இப்போது அந்த சூழல் இல்லை. சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் மீண்டும் சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தங்களை மீறியுள்ளன. அதேபோல், வடகொரியாவும் ஈரானும் கூட அணு ஆயுத அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன.

அணு ஆயுதப் போரை நெருங்கும் உலகம்; பிரித்தானிய எச்சரிக்கை! | A World Approaching Nuclear War British Alert

உக்ரைன் போரையும் மாஸ்கோவிலும் பீஜிங்கிலும் நடத்தப்படும் இரகசிய ஆட்சியையும் பார்க்கும்போது எப்போது வேண்டுமானாலும் உலகத்திற்கு திடீரென பிரச்சினை உருவாகலாம் என எதிர்பார்க்கமுடிகிறது என ஸ்டீபன் லவ்க்ரோவ் கூறியுள்ளார்.

அதாவது சீனாவும் ரஷ்யாவும் தங்கள் அணு ஆயுதங்களின் திறனை மேம்படுத்தி வருகின்றன. கூடவே ஈரான், வடகொரியா போன்ற நாடுகளும் அணு ஆயுதங்கள் உருவாக்க போட்டிபோட்டுக் கொண்டு முயற்சி செய்கின்றன.

மாபெரும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு ரஷ்யாவானாலும் சரி சீனாவானாலும் சரி மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியின்போது பிரச்சினை கைமீறிப்போகுமானால் முடிவு அணு ஆயுதப்போராக இருக்கலாம் என்பதே அமைதியை விரும்புவோர் கூறும் எச்சரிக்கை அவர் தெரிவித்துள்ளார்.