போதைப்பொருளை ஊசி எடுத்து கொண்டதால் யாழில் இரண்டாவது உயிரிழப்பு!

0
250

யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், சமீபத்தில் இருதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இரண்டாவது உயிரிழப்பு! மருத்துவரின் எச்சரிக்கை மீறிய இளைஞர் | Jaffna This Month Second Death Herion Drugs Use

இருப்பினும், நேற்று முன்தினமும் (26-07-2022) மீளவும் ஊசி மூலம் போதைப்பொருளை இளைஞன் எடுத்துகொண்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

யாழில் இரண்டாவது உயிரிழப்பு! மருத்துவரின் எச்சரிக்கை மீறிய இளைஞர் | Jaffna This Month Second Death Herion Drugs Use

இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப்பொருளினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்று தான் காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையினால் இந்த மாதத்தில் இரண்டாவது உயிரிழப்பு இது என்பதுடன் அண்மைய நாட்களில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.